கள்ளக்காதல்.. 4 வயது மகனை கொன்ற பெண் கைது

451

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ளது வி.குச்சம்பட்டி. இந்த ஊரை சேர்ந்தவர் ராம்குமார் (வயது28).இவரது மனைவி ஆனந்தஜோதி (25). இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது. இவர்களுடைய மகன் ஜீவா (5), மகள் லாவண்யா (3). ராம்குமார் கொத்தனார் வேலை செய்து வருகிறார். ஆனந்தஜோதி விருதுநகரில் உள்ள கடையில் வேலை செய்து வருகிறார். ஜீவா குச்சம்பட்டியில் உள்ள அங்கன்வாடியில் படித்து வந்தான். சம்பவத்தன்று ஜீவா பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து படுத்து தூங்கியுள்ளான்.பின்னர் மாலையில் தூங்கிய ஜீவாவை ஆனந்தஜோதி எழுப்பியுள்ளார். அப்போது ஜீவா பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்ததாக கூறி சிகிச்சைக்கு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு ராம்குமார் உறவினர்கள் கொண்டு சென்றனர். அங்கு ஜீவாவின் உடலை பரிசோதனை செய்த டாக்டர், சிறுவன் ஜீவா இறந்து பலமணி நேரம் ஆகியுள்ளது என்றும் கழுத்தில் கயிறு போட்டு இறுக்கிய தடயமும், நகக் கீறல் உள்ளதாக தெரிவித்தார். இதனால் சந்தேகம் அடைந்த ராம்குமார் இதுகுறித்து வி.சத்திரப்பட்டி போலீசில் தனது மகன் ஜீவா சாவு குறித்தும், தனது மனைவி ஆனந்தஜோதி மீது சந்தேகம் உள்ளதாகவும் புகார் கொடுத்தார். இது குறித்து ஆனந்தஜோதியை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். ஆனந்தஜோதிக்கும், ராம்குமார் உறவுக்காரர் மருதுபாண்டி என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர்கள் நெருக்கமாக இருந்ததை ஜீவா பார்த்துள்ளான். இதனால் தங்கள் கள்ள தொடர்பு ராம்குமாருக்கு தெரிந்துவிடுமோ என்று நினைத்துள்ளனர். இதனால் ஆனந்தஜோதியும், மருதுபாண்டியும், சேர்ந்து தூங்கி கொண்டு இருந்த ஜீவாவின் வாயை பொத்தி கழுத்தில் கயிற்றால் இறுக்கி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

LEAVE A REPLY