கரூர் பெண்ணை ஏமாற்றிய வழக்கில் முகிலன் கைது

676
Spread the love

சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போய் 140 நாட்களுக்கு மேல் ஆன நிலையில், திருப்பதி ரயில் நிலையத்தில் நேற்றிரவு கண்டுபிடிக்கப்பட்டார். அவரை எழும்பூர் சிபிசிஐடி போலீசார் காட்பாடி வழியாக சென்னை அழைத்து வந்தனர்.  பின்னர் எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரிக்கப்பட்டார். இந்நிலையில் பாலியல் வன்கொடுமை வழக்கில் முகிலன் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் அறிவித்துள்ளனர்.

 நாமக்கல் மாவட்டத்தை  சேர்ந்த முருகேசன்  என்பவரின் மகள் ராஜேஸ்வரி (37), கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் வசித்து வருகிறார். அவர் குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் முகிலன் மீது கடந்த மார்ச் மாதம் பாலியல் புகார் மனு அளித்திருந்தார். அதில், முகிலன் செய்து வந்த சமூக சேவையால்  ஈர்க்கப்பட்டு, அவருடன் இணைந்து சமூக சேவையாற்றி வந்தேன். கடந்த 26.2.2017 அன்று ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக நெடு வாசலில்  நடைபெற்ற போராட்டத்தில் அவருடன் பங்கேற்றேன். பின்னர் 27-ந் தேதி  நெடுவாசல் பேருந்து நிலையம் அருகே உள்ள காம்ப்ளக்சில் இருவரும் தங்கினோம். அப்போது முகிலன், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைக்கூறி, என்னை  கட்டாயப்படுத்தி என்னுடன் உடலுறவு கொண்டார். இதுபோன்று பலமுறை என்னை பலவந்தப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதன் அடிப்படையில் குளித்தலை அனைத்து மகளிர் போலீசார் முகிலன் மீது  வன்கொடுமை தடுப்புச் சட்டம், ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் முகிலன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில்தான், தற்போது முகிலன் கைது செய்யப்பட்டுள்ளார்.  முதற்கட்டமாக ஆட்கொணர்வு வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் முகிலனை சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்த உள்ளனர். இதையடுத்து பாலியல் வழக்கிலும் முகிலனை ஆஜர்படுத்த டிரான்சிட் வாரண்ட் பெற்று, கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. 

LEAVE A REPLY