பொன்மலை கொலை.. குற்றவாளிகள் ஸ்டேஷனில் சரண்டர்…

987
Spread the love

திருச்சி கொட்டப்பட்டு ஜெ. ஜெ. நகரை சேர்ந்தவர் சின்ராஜ்(24). இவர் கடந்த 15ம் தேதி பொன்மலைப்பட்டி கடைவீதி பகுதியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த பொன்மலை போலீசார் தனிப்படை அமைத்து படுகொலை செய்த பொன்னேரிபுரம் அலெக்ஸ், மேலகல்கண்டார்கோட்டை சரத் உள்ளிட்டவர்களை தேடி வந்தனர். அவர்கள் சென்னைக்கு சென்று பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் சென்னை வரை தேடி சென்றனர். ஆனால் குற்றவாளிகள் சிக்கவில்லை. இந்நிலையில்  அலெக்ஸ், சரத், மற்றும் ஆல்வின் ஆகியோர் இன்று திருச்சி பொன்மலை போலீஸ் ஸ்டேஷனில் சரண் அடைந்தாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.. விசாரணைக்கு பின்னர் 3 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்படுகின்றனர்.. 

LEAVE A REPLY