மைசூர் போண்டா…

49
Spread the love

தேவையான பொருட்கள்:
உளுந்து -150 கிராம்
பச்சரிசி- 1 ஸ்பூன்
பச்சை மிளகாய்: 2
மிளகு- 2 ஸ்பூன்
சீரகம்- 2 ஸ்பூன்
இஞ்சி- சிறிதளவு
முந்திரிப்பருப்பு: 10
பெருங்காயத்தூள்: அரை ஸ்பூன்
கறிவேப்பிலை: சிறிதளவு
தேங்காய்- 2 சில்லு

செய்முறை: பச்சரிசி, உளுந்தை ஒரு மணிநேரம் ஊற வைத்து, கிரைண்டரில் லேசாக தண்ணீர் விட்டு நன்றாக அரைக்கவும். பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காயத்தூளை மிக்ஸியில் அரைத்து அரிசி மாவில் சேர்க்கவும். இத்துடன் பொடியாக நறுக்கிய முந்திரிப்பருப்பு, கறிவேப்பிலை, பல்லு பல்லாக நறுக்கிய தேங்காய், சீரகம், தேவையான அளவு உப்பு, மிளகு சேர்த்து நன்கு பிசையவும். எண்ணெய் காய்ந்ததும் எலுமிச்சம்பழ அளவு உருண்டைகளாக மாவை உருட்டி, சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். இப்ப சாப்பிட்டு பாருங்க… இதுதான் மைசூர் போண்டா.

LEAVE A REPLY