Spread the love

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, மாதாந்திர பூஜைக்காக கடந்த வாரம் திறக்கப்பட்டது. ஆனால், பெண்களை அனுமதிக்க கேரள அரசு தீவிரம் காட்டி போதுமான போலீஸ் பாதுகாப்பை உறுதி செய்திருந்தாலும் போராட்டக்காரர்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்காமல் போராட்டம் நடத்தினர். இதனால், பதற்றம் ஏற்பட்டது. கோயில் திறந்திருந்த 5 நாட்களும் பம்பை, நிலக்கல் உள்ளிட்ட சபரிமலை பகுதிகள் போர்க்களமாயின.கோயிலுக்கு செல்ல முயன்ற பெண்கள் இறுதி வரை அனுமதிக்கப்படவில்லை. போராட்டம் நடத்தியதாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

 இந்நிலையில் சபரிமலை கோயில் நடை சிறப்பு பூஜைக்காக நாளை மறுதினம் (நவம்பர் 5ஆம் தேதி) திறக்கப்படுகிறது. இதனால் இன்று நள்ளிரவு முதல் நவம்பர் 6-ம் தேதி வரை, பம்பா, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பித்து பத்தனம்திட்டா கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY