நடிகை நம்பரை ஆபாச தளத்தில் பதிவு செய்த டெலிவரி பாய்…

445

குறிப்பாக சக்திவேல், சுந்தரம் சந்திரபோஸ் மற்றும் மகேஸ்வரன் ஆகிய மூன்று நபர்கள் பெயரையும், அவர்களது எண்ணையும் கொடுத்து புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் முதற்கட்ட விசாரணை நடத்தினர்.

நடிகை காயத்ரி ராவ் குறிப்பிட்ட மூன்று பேருக்கு  சம்மன் அனுப்பி விசாரணை செய்தனர். செல்போன் எண்களை வைத்து ஆய்வு செய்ததில், ஆபாச வீடியோக்கள் தகவல்கள் பகிர்ந்து கொள்வதற்காக, அவர்கள் வைத்திருந்த வாட்ஸ்அப் குரூப்பில் நடிகை காயத்ரி ராவ் நம்பரை ஒருவர் பதிவிட்டு இருந்ததாகவும், அதை வைத்து தொடர்பு கொண்டது தெரியவந்துள்ளது.

அந்த வாட்ஸ்அப் குரூப்பில் நடிகை காயத்ரி ராவின் நம்பரை பதிவிட்டவர் யார் என விசாரித்தபோது, டோமினோஸ் பீட்சா டெலிவரி செய்யும் பரமேஸ்வரன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து தேனாம்பேட்டை போலீசார் பரமேஸ்வரனை பிடித்து விசாரணை செய்துள்ளனர்.

விசாரணையில் நடிகை காயத்ரி ராவ் வீட்டிற்கு கடந்த பிப்ரவரி 9-ம் தேதி பீட்சா ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்துள்ளார். அந்த பீட்சாவை பரமேஸ்வரன் என்ற  நபர் டெலிவரி செய்வதற்காக, நடிகை காயத்ரி ராவிற்கு அடிக்கடி செல்போனில் அழைத்து பேசியுள்ளார்.டெலிவரி கொடுக்கும் போது பரமேஸ்வரனுக்கும், நடிகை காயத்ரி ராவிற்க்கும்  பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரத்தில் நடிகை காயத்ரி ராவின் நம்பரை, வாட்ஸ் அப் க்ரூப்பில் பழிவாங்கும் நோக்கத்தில் பதிவிட்டதாக பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

காயத்ரி ராவிடம் வீட்டில் உள்ள சி.சி.டிவி காட்சியில் பிரச்னை செய்தது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து போலிசார் வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ள உள்ளனர். இந்நிலையில் டோமினோஸ் பீட்சா நிறுவனத்திடம் கேட்ட போது பரமேஸ்வரனை பணி நீக்கம் செய்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY