9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்.. வேட்பு மனு தாக்கல் நிறைவு..

36
Spread the love

காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, கள்ளக்குறிச்சி, நெல்லை, விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய 9 மாவட்டங்களில் 27,003 இடங்களுக்கு நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நேற்று வரை 64,000-க்கும் மேற்பட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் கடைசி நாளான இன்று ஆயிரக்கணக்கானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதனால் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தொிகிறது. 25ம் தேதி வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள். அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி இரு கட்டமாக தேர்தல் நடைபெறும். 12ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய தேசிய லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதிமுக கூட்டணியில் பாஜக, தமாகா ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதிமுக கூட்டணியில் இருந்த பாமக கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிடுகிறது. தேமுதிக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுகிறது. இதன் மூலம் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 7 முனை போட்டி ஏற்பட்டுள்ளதால் 9 மாவட்டங்களில் இப்போதே தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. 

LEAVE A REPLY