கொரோனா குறைய ஆரம்பித்திருக்கிறது.. பிரதமர் மோடி

84
Spread the love

பிரதமர் நரேந்திரமோடி மாநில முதல்வர்களுடன் இன்று காணொளி காட்சி மூலம் அவர் கூறியதாவது:-கொரோனா நோய் தடுப்பு சரியான திசையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. சுகாதார பணியாளர்கள் ஒவ்வொரு நாளும் புதிய சவால்களை எதிர்கொள்கின்றனர். கொரோனா பரவல் நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது. புதிய சூழல் உருவாகி கொண்டிருக்கிறது. கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் மாநிலத்தின் பங்கு இன்றியமையாதது. பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து, குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. தற்போது நம்பிக்கை அதிகரித்து, அச்சம் குறைகிறது. கொரோனா பரவல் பாதி குறைந்துள்ளது நம் நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி. பாதிப்பு குறைந்துள்ளது நமது முயற்சிக்கு கிடைத்த வெற்றி. கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர். அதனால்தான் அதிக ஒத்துழைப்பு வழங்குகின்றனர். ஆரோக்கிய சேது செயலியால் கொரோனா கண்டறிவது எளிதாக உள்ளது. 80 சதவீத பாதிப்பு 10 மாநிலங்களில் தான் உள்ளது என்று அவர் பேசினார்.

LEAVE A REPLY