ஐபிஎல்லில் இருந்து நடராஜன் முழுமையாக விலகல்….

461
Spread the love

தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரரான நடராஜன் சன்ரைடர்ஸ் ஹைதராபாத் அணிக்காக கடந்த 2020ஆம் ஆண்டு 16 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளை எடுத்தார். இந்த வருடம் ஐபிஎல் 20-20 போட்டியில் இரண்டு போட்டிகளில் விளையாடினார். 1/32, 1/37 என பந்து வீசிய அவர் அதன் பிறகு சன்ரைடர்ஸ் விளையாடிய போட்டிகளில் கலந்து கொள்ளவில்லை. இது தொடர்பாக அவர் வௌியிட்டுள்ள செய்தியில்….. இந்த வருடம் ஐபிஎல் போட்டிகளில் இருந்து முழுவதுமாக விலகுகிறேன். மிகவும் வருத்தமாக உள்ளது. கடந்த வருடம் சிறப்பாக விளையாடினேன். இந்த வருடம் ஐபிஎல் போட்டி இந்தியாவில்  நடைபெறுவதால் மிகவும் எதிர்பார்ப்புடன் இருந்தேன். முழக்க காலில் ஏற்பட்ட காயம் காரணம் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளது. எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என்ன சொல்வதென்று தொியவில்லை. மிகவும் உணர்வுபூர்வமாக உள்ளது. இனி வரும் எல்லா ஆட்டங்களிலும் சன்ரைடர்ஸ் அணி வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்று கூறி உள்ளார். 

LEAVE A REPLY