ஆந்திர மாநிலம் திருப்பதியில் தேசிய ஜூனியர் தடகள போட்டி நடந்தது. இதில்  5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். இதில் தமிழக வீரர்கள் 5 தங்கம், 6 வெள்ளி, 2 வெண்கல பதக்கம் என 13 பதக்கங்கள் பெற்றனர். இந்த போட்டிகளில் திருச்சி மாவட்ட தடகள சங்கம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 8 வீரர்கள் கலந்து கொண்டனர்.

இதில் திருச்சி மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்சியாளர் சீனிவாசனிடம் பயிற்சி பெற்ற மாணவன் சுரஜ் 400 மீ ஓட்டப் பந்தயத்தில் வெள்ளி பதக்கம் பெற்றார். இந்நிலையில் திருச்சி வந்த சுரஜ்க்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர் டி.ராஜு மக்கள் சக்தி இயக்க மாநில ஆலோசகர் கே.சி. நீலமேகம், தடகள சங்க பொருளாளர் ரவிசங்கர், தடகள சங்க ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் பாபு, பழனிசாமி, சுஜா, மற்றும் தடகள வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

 

LEAVE A REPLY