கொலையான எஸ்.ஐயின் கடைசி நிமிடங்கள்.. திருடர்களை விரட்டிய சிசிடிவி காட்சி…

9168
Spread the love

இன்று அதிகாலை ஆடு திருடர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட திருச்சி மாவட்டம் நவல்பட்டு போலீஸ் ஸ்டேஷன் எஸ்ஐ பூமிநாதனின் (55) சொந்த ஊர் நாகை மாவட்டம் தலைஞாயிறு. சுமார் 35 ஆண்டுகாலமாக திருச்சி மாவட்ட காவல்துறையில் பணியாற்றி வரும் பூமிநாதனுக்கு கீதா(48) என்ற மனைவியும் தற்போது அண்ணா பல்கலைகழகத்தில் எம்.இ படிக்கும் குகன்(23) என்கிற மகனும் உள்ளனர். நவல்பட்டு போலீஸ் ஸ்டேஷனில் நேற்று எஸ்ஐ பூமிநாதனும் மற்றொரு எஸ்எஸ்ஐயான சித்திரவேலும் தான் நைட் டியூட்டி. வழக்கம் போல் 1.40 மணி அளவில் பூமிநாதனும், சித்திரவேலும் தனித்தனி டூவீலரில் பூலாங்குடி காலனி ரோட்டில் திருவெறும்பூரை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிரே (சூரியூர் நோக்கி)2 டூவீலர்கள் வேகமாக வந்துள்ளன. ஒன்றில் ஆடு ஒன்றை வைத்துக்கொண்டு2 பேரும்,  மற்றொரு டூவீலரில் சாதாரணமாக 2 பேரும் வந்தனர். அவர்களை பூமிநாதன் மறித்தார். 2 டூவீரும் நிற்கவில்லை. உடனே டூவீலரை திருப்பிய பூமிநாதன் ‘ சித்திரவேலு வாய்யா, திருட்டுப்பயலுக மாதிரி தெரியுது’ என கூறிவிட்டு சித்திரவேலுவை கூட கவனிக்காமல் அவர்களை விரட்ட ஆரம்பித்திருக்கிறார். போலீசார் விரட்டுவதை உணர்ந்த 2 டூவீலர் திருடர்கள் திசைக்கு ஒருவராக பிரிந்தனர். ஆடு இருந்த டூவீலரை எஸ்ஐ பூமிநாதன்  விரட்ட ஆரம்பித்தார். எஸ்எஸ்ஐ சித்ரவேலில் டூவீலர் மெதுவாக பின்தொடர ஆரம்பித்தது. நவல்பட்டு எல்லையையும் தாண்டி திருச்சி மாவட்டத்தையும் தாண்டி சுமார் 15 கிமீ தூரத்திற்கும் மேலாக புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட  மூகாம்பிகை கல்லூரிக்கு அருகே  களமாவூர் ரயில்வே கேட் பகுதியில் உள்ள பள்ளத்துப்பட்டி என்ற ஊருக்கு அருகில் சென்ற போது சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியிருந்ததால் ஆடு திருடர்களின் டூவீலர் வெளியில் செல்ல முடியவில்லை. வேகமாக பின் தொடர்ந்து வந்த எஸ்ஐ பூமிநாதன் அவர்கள் ஓடி விடாமல் மறித்து ஒருவனைப்பிடித்து நிறுத்தினார். பின்னர் 2 பேரையும் கீழே உட்கார வைத்த பூமிநாதன் உடனடியாக எஸ்எஸ்ஐ சித்ரவேலிடம் செல்போனில் சீக்கீரம் வாய்யா அவங்களை பிடித்து விட்டேன் என இடத்தை கூறியிருக்கிறார். எஸ்எஸ்ஐ சித்ரவேலுக்கு அந்த இடம் தெரியவில்லை. இருந்தாலும் தான் அங்கு வந்து விடுவதாக கூறியிருக்கிறார். சுமார் 15 நிமிடமாக எஸ்எஸ்ஐ சித்ரவேல் வராததால் கீரனூர் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் தனது நண்பரான சேகர் என்பவருக்கு பூமிநாதன்போன் போட்டுள்ளார். மேலும் தான் இருக்கும் இடத்தை பூமிநாதன் கூறியிருக்கிறார்.

சுமார் 10 நிமிடத்தில் போலீஸ்காரர் சேகர் அங்கு பகுதிக்கு வந்திருக்கிறார். அவர் ரயில்வே சுரங்கப்பாதையின் மற்றொரு முனையில் வந்து விட்டதை புரிந்துக்கொண்டு  சுற்றி வருவதாக கூறி விட்டு சேகர் கிளம்பினார். இந்த இடைப்பட்ட நிமிடங்களில் பிடிபட்ட 2 திருடர்களும் எஸ்ஐ பூமிநாதனிடம் கெஞ்சி பார்த்திருக்கின்றனர். அவர்களால்  வயல்வெளியில் ஓடவும் முடியவில்லை. மேலும் 2 போலீசாரும் சில நிமிடங்களில் வந்து விடுவார்கள் என்கிற நிலையில் தற்செயலாக பூமிநாதன் திரும்பி செல்போனை பார்த்துக்கொண்டிருந்த சமயத்தில் திருடனில் ஓருவன் டூவீலரில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பின்தலையில் வெட்டியுள்ளான். பூமிநாதன் திரும்பி பார்க்க முயற்சிக்க மீண்டும் 2 முறை தலையில் வெட்டு வுிழுந்துள்ளது. ரத்த வெள்ளத்தில் எஸ்ஐ பூமிநாதன் சாய, 2 திருடர்களும் டூவீலரை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டனர். சில நிமிடங்களில் எஸ்எஸ்ஐ சித்தரவேல் மற்றும் கீரனூர் போலீஸ் சேகர் இருவரும் 2.40 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்த போது ரத்துவெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார் எஸ்ஐ பூமிநாதன்.. தற்போது ஆடு திருடர்களை பூமிநாதன் டூவீலரில் விரட்டி செல்வதும்.. சுமார் 1 மணி நேரம் கழித்து திருடர்கள் மட்டும் திரும்பி செல்வதும் என சிசிடிவி பதிவுகள் கிடைத்துள்ளன. இதில் கொலையாளிகள் பல்சர் வாகனத்தில் சென்ற விபரம் தெரியவந்துள்ளது.   

LEAVE A REPLY