Spread the love

தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், இதனால் இந்தியாவுக்கு வரமாட்டேன் என்று நீரவ் மோடி தெரிவித்துள்ளார்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி கடன் வாங்கி மோசடி செய்தவர் வைர வியாபாரி நிரவ்மோடி.  இதையடுத்து அமலாக்க துறையினரால் தேடப்பட்டு வரும் நீரவ் மோடி தற்போது லண்டனில் இருப்பதாக கூறப்படுகிறது. இவரை நாடு கடத்தவும் அரசு தரப்பில் கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் நிரவ் அமலாக்க துறைக்கு அனுப்பியுள்ள மெயிலில்; நான் இந்தியாவுக்கு வர முடியாது. அங்கு வந்தால் எனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார். இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY