NEET, JEE தேர்வுகள் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு

42
Spread the love

மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வை வருகிற 26-ந்தேதி நடத்த மத்திய அரசு திட்டமிட்டு இருந்தது. இதைப்போல என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கான ஜே.இ.இ. பிரதான நுழைவுத்தேர்வுகள் வருகிற 18 முதல் 23-ந்தேதி வரையும், ஐ.ஐ.டி.களில் சேர்வதற்கான ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வுகள் ஆகஸ்டு 23-ந்தேதியும் நடத்தப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்து இருந்தது.

இந்த தேர்வுகளுக்காக சுமார் 25 லட்சம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர்.  ஆனால் நாடு முழுவதும் நாளும் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாலும், தொடர்ச்சியான ஊரடங்கு காரணமாகவும் இந்த தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற குழப்பம் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் மத்தியில் நிலவி வந்தது. எனவே இது தொடர்பாக தெளிவான அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இது தொடர்பாக மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் தரமான கல்வியை உறுதி செய்ய வேண்டியதை கருத்தில் கொண்டு, ஜே.இ.இ. மற்றும் நீட் நுழைவுத்தேர்வுகளை தள்ளி வைப்பது என நாங்கள் முடிவு செய்துள்ளோம். அதன்படி ஜே.இ.இ. பிரதான தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6-ந்தேதிக்கு இடையில் நடத்தப்படும். ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு செப்டம்பர் 27-ந்தேதியும், நீட் தேர்வு செப்டம்பர் 13-ந்தேதியும் நடத்தப்படும்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

LEAVE A REPLY