வீட்டை காலி செய்ய மனமில்லாத ‘மாஜி எம்பிக்கள்’

176

200க்கும் மேற்பட்ட ‘மாஜி’ எம்.பி.,க்கள், வீட்டை காலி செய்யாததால், புதிய எம்.பி.,க்களுக்கு அரசு பங்களா ஒதுக்கப்படாமல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியில் அமர்ந்தது. நாட்டின், 16வது லோக்சபா கலைக்கப்பட்டு, இரண்டு மாதங்களாகியும், 200க்கும் மேற்பட்ட முன்னாள் எம்.பி.,க்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாக்களை இன்னும் காலி செய்யவில்லை. வழக்கமாக, லோக்சபா கலைக்கப்பட்ட ஒரு மாதத்துக்குள், பங்களாக்களை காலி செய்ய வேண்டும். இதனால், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, 260க்கும் மேற்பட்ட, எம்.பி.,க்களுக்கு அரசு பங்களா ஒதுக்கப்படவில்லை

 

LEAVE A REPLY