Spread the love

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.  இந்த வழக்கு விசாரணை  சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. தற்போது இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன் முறை கோர்ட்டில் ஆஜராக வந்த நிர்மலாதேவி சாமியாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அருப்புக்கோட்டை மசூதி ஒன்றுக்கு சென்ற நிர்மலாதேவி அங்கும் ரகளை செய்தார். இதையடுத்து திருநெல்வேலியில் உள்ள ஒரு மனநல மருத்துவமனையில்  நிர்மலாதேவி சிகிச்சை பெற்றார்.

இந்நிலையில் இன்று காலை கோர்ட்டில் ஆஜரானார். அப்போது நீதிபதி குற்றச்சாட்டுகள் குறித்து அவரிடம் கேட்டார். அதற்கு  நிர்மலாதேவி மாணவிகளை எனது குழந்தைகளை போலத்தான் பாவித்தேன் என்று கூறி குற்றச்சாட்டுகளை மறுத்தார். அப்போது அவர் திடீரென்று மயங்கி விழுந்தார். அவரை பெண் போலீசார் தாங்கிபிடித்து மயக்கம் தெளிவித்தனர். அதன்பின் சற்று நேரம் கழித்து கண்விழித்த நிர்மலாதேவி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இச்சம்பவம் கோர்ட் வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

LEAVE A REPLY