டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு டிச. 16 ஆம் தேதி மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பஸ்சில் 6 பேரால் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இதை செய்த 6 வாலிபர்களை டெல்லி போலீசார் கைது செய்தனர். 6 பேரில் ஒருவன் 15 வயது என்பதால் சிறுவர் சிறையில் அடைக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்குப்பின் விடுதலை செய்யப்பட்டான். மற்ற 5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங்  திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டான். இதையடுத்து பவன்குப்தா, முகேஷ்சிங், தனேஷ் சர்மா, அக்‌ஷய் தாகூர் ஆகிய 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, சுப்ரீம் கோர்ட்டும் அதை உறுதி செய்தது.  தண்டனையை குறைக்க கோரி டெல்லி கவர்னருக்கு கருணை மனு அனுப்பினர். கவர்னரும் நேற்று முன்தினம் கருணை மனுக்களை தள்ளுபடி செய்து அவர்களை தூக்கில் போட பரிந்துரைத்தார். இதையடுத்து அவர்கள் விரைவில் தூக்கிலிடப்படவுள்ளனர்.

இந்நிலையில் திகார் சிறையில் குற்றவாளிகளை தூக்கில் போட ஊழியர் இல்லை என்பது தெரிய வந்திருக்கிறது. கடைசியாக பயங்கரவாதி அப்சல் குருவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை திகார் ஜெயிலில் நிறைவேற்றப்பட்டது. இச்சிறையில் குற்றவாளிகளை தூக்கில் போட நிரந்தர ஊழியர் கிடையாது. இதனால் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர் நியமிக்கப்பட்டு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY