Spread the love

அயோத்தி சர்ச்சைக்குரிய நில விவகாரம் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில்  நிலுவையில் உள்ளது. இதில் இணக்கமான தீர்வு காண சமரச குழு ஒன்று அமைக்கப்பட்டது. ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா தலைமையில் ஆன்மிகவாதி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், மூத்த வக்கீல் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இதில் இடம் பெற்றுள்ளனர்.

இந்த குழு தனது அறிக்கையை நேற்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சமரச குழுவின் அறிக்கையில் அயோத்தி விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் சமரசம் ஏற்பட வாய்ப்பில்லை என்று குறிப்பிட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து வரும் 6 ஆம் தேதி முதல் தினமும் அயோத்தி வழக்கு விசாரிக்கப்படும் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அறிவித்தார். இதனால் இந்த விவகாரத்தில் விரைவில் தீர்வு எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY