நடிகர் சங்க தனி அதிகாரி நியமனத்திற்கு தடையில்லை!

85

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் சில மாதங்களுக்கு முன் தேர்தல் நடந்த நிலையில், முடிவுகளை வெளியிட நீதிமன்றம் தடை விதித்திருந்தது. தேர்தல் முடிவுகள் வெளியாக தாமதமாகும் நிலையில், பதிவுத்துறை உதவி ஐ.ஜி கீதாவை, நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியாக நியமித்து நேற்று முன்தினம் தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த நியமனத்திற்கு தடை விதிக்க கோரி விஷால் தரப்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நிலுவையில் உள்ள தேர்தல் வழக்குகளில் தீர்ப்பு வரும் வரை மட்டுமே சிறப்பு அதிகாரி நியமனம் என்றும், நடிகர் சங்கத்தில் வெற்றிடம் இருப்பதால், சங்க நடவடிக்கைகளை கவனிக்கவே அதிகாரி நியமிக்கப்பட்டார் என்று  அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இடைக்கால தடை விதிக்க மறுத்த நீதிபதி கல்யாண சுந்தரம் இது குறித்து அரசு 14 ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

 

LEAVE A REPLY