Spread the love

அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையில் அணு ஆயுத போர் வெடிக்கும் அச்சம்  நிலவி வந்த நிலையில் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்  அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்’ என்று அறிவித்தார்.

இதையடுத்து ட்ரம்ப்பும்,கிம் ஜோங்கும் சிங்கப்பூரில் சந்தித்தனர். இருவரும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன்படி, வட கொரியா அணு ஆயுதங்களை கைவிடுவதாக ஒப்புக் கொண்டது. இதனால் ‘வட கொரியா மீது விதிக்கப்பட்ட  தடைகள் படிப்படியாக நீக்கப்படும்’ என்றது அமெரிக்கா. 

இந்நிலையில் புத்தாண்டான இன்று கிம் ஜோங் வெளியிட்டுள்ள அறிவிப்பில், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது என்னவோ உண்மைதான். ஆனால் அதைத் தவிர அடுத்தக் கட்ட நகர்வுகள் எதுவும் இல்லை. அமெரிக்கா எங்களுக்கு சத்தியம் செய்து எங்கள் மீதான  தடைகள் குறைக்கப்படும் என்றது. ஆனால், அதற்கு ஏற்ற செயல்பாடு இல்லை. அமெரிக்கா, தனது சத்தியத்தை காப்பாற்றாவிட்டால்  எங்கள் நாட்டு இறையாண்மையை நாங்கள் வேறு வழிகளில் பாதுகாக்க வேண்டி வரும். இருப்பினும் உலகம் விரும்பும் முடிவை நோக்கி நாங்கள் நகர தயாராகவே இருக்கிறோம். இவ்வாறு அவர் அறிவித்துள்ளது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

LEAVE A REPLY