Spread the love

தென்மேற்கு பருவமழை ஜூன் 8 ஆம் தேதி தொடங்கியது. தற்போது தென்மேற்கு பருவமழை காலம் முடிவடைய உள்ளது. இம்மழை கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானால மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா மற்றும் கிழக்கு மாநிலங்களிலும் அதிகம் பெய்தது. தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியையொட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களிலும் அதிக அளவு மழை இருந்தது. 

இந்நிலையில் இன்று  சென்னை வானிலை மைய அதிகாரி புவியரசன் கூறியிருப்பதாவது; தென்மேற்கு பருவ மழை வடஇந்தியாவில் விலகுவதற்கான அறிகுறி தொடங்கி விட்டது. ராஜஸ்தான் மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை விலகி விட்டது.

தமிழகத்தை பொறுத்தவரை தென்மேற்கு பருவமழை அடுத்தவாரம் விலகி விடும். அதன்பிறகு காற்றின் திசை மாறும். அதன்பிறகு வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும் என்பதை கணித்து விடுவோம். அநேகமாக வரும் 20 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கிறோம்.

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை நவம்பர் 2 ஆம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டு முன்கூட்டியே அக்டோபர் 20 ஆம் தேதி தொடங்கும் அறிகுறி காணப்படுகிறது என்றார்.

LEAVE A REPLY