கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நர்ஸ் திடீர் சாவு

334
Spread the love
ராமநாதபுரம் அருகே உள்ள பாண்டியூரை சேர்ந்தவர் இளையராஜா என்பவரது மனைவி கலைச்செல்வி (39). இவர் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் அங்கிருந்து தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய கலைச்செல்வி வீட்டில் தொடர் கண்காணிப்பில் இருந்து வந்தார்.
 
இந்நிலையில் நேற்று அதிகாலை மூச்சுத்திணறல் ஏற்பட்டு கலைச்செல்வி இறந்தார். அரசு ஆஸ்பத்திரி நர்சு ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் திடீரென்று இறந்துபோன சம்பவம் சுகாதாரத்துறையினர் மற்றும் செவிலியர்கள் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் அறிவித்த நிவாரண தொகையை கலைச்செல்வி குடும்பத்திற்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. 

LEAVE A REPLY