திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் தனியார் கல்லுாரி நர்ஸ்களுக்கு பணி….

186
Spread the love

திருச்சி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வரும் நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை செவிலியர்களுடன் இணைந்து தனியார் செவிலிழயர் பயிற்சி கல்லுாரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவிகளை ஈடுபடுத்துவது தொடர்பாக இன்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தனியார் பயிற்சி கல்லுாரி முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில்….. தனியார் பயிற்சி கல்லுாரி இறுதி ஆண்டு பயிலும் மாணவிகளை கொரோனா சிகிச்சை வார்டில் பணியமர்த்தலாம். ஒரு நாளைக்கு 30 செவிலியர்கள் 8 மணி நேர சுழற்சி

அடிப்படையில் பணி செய்ய முடிவெடுக்கப்பட்டது. கொரோனாவை கட்டுப்படுத்த தனியார் செவிலியர் பயிற்சி கல்லுாரி நிர்வாகத்தினர் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக கலெக்டரிடம் உறுதி அளித்தனர். இக்கூட்டத்தில் மாவட்ட குடும்பநல இயக்குனர் லெட்சுமி, மருத்துவ கல்லுாரி  மருத்துவமனை டீன் வனிதா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

LEAVE A REPLY