திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் ஓபிசி பிரிவிற்கு நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு, மாவட்ட தலைவர் எல்.ரெக்ஸ் முன்னிலையில் திருச்சி எம்பி திருநாவுக்கரசர் நியமன கடிதத்தை வழங்கினார். மாவட்ட செயலாளர் பகதுார், துணைத்தலைவர் ஷீலா செலஸ், மாவட்ட பொருளாளர் சஜ்ஜாத் உசேன், இணை செயலாளர்கள் கிதியோன் ஜெயராஜ், நுார் அஹமத், மணிகண்டன், துணை தலைவர்கள் விஸ்வநாதன், வினோத் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 34 பேருக்கு திருநாவுக்கரசர் எம்பி நியமன கடிதங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் டிசய்தி தொடர்பாளர் பெனட் அந்தோணிராஜ், மாநில ஓபிசி அணி பொதுச்செயலாளர் குழ.முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.