அக்.1 முதல் ரேசனில் மண்ணெண்ணெய் விலை உயர்கிறது….

23
Spread the love

தமிழக நியாயவிலை கடைகளில் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் மண்ணெண்ணெய் விலை உயர்கிறது. பொது விநியோக திட்ட மண்ணெண்ணெய் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியதால் தமிழக நியாயவிலை கடைகளில் மண்ணெண்ணெய் விலை உயர்கிறது. அதன்படி வரும் அக் 1 ஆம் தேதி முதல் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விலை ரூ.15 லிருந்து ரூ.16.50 ஆக உயர்கிறது.

இதுகுறித்து உணவுப் பொருள் வழங்கல் ஆணையர் சஜ்ஜன் சிங் சவான் மாவட்ட கலெக்டர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் அந்தந்த மாவட்டங்களில் கொள்முதல் பட்டியல் அடிப்படையில் மண்ணெண்ணெய் விற்பனை விலை திருத்தி நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் மண்ணெண்ணெய் மொத்த வணிகர்களுக்கான விளிம்புத்தொகை, போக்குவரத்துக் கட்டண ஆதாய விளிம்புத் தொகை உயர்த்தப்பட்டு உள்ளதால் அதற்கேற்ப மண்ணெண்ணெய் சில்லறை விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY