என்னத்த சொல்ல.. மாப்பிள்ளையின் தந்தையும், பெண்ணின் தாயும் ‘எஸ்கேப்’

310

குஜராத்தின், சூரத் மாவட்டத்தை சேர்ந்தவர், ராஜேஷ், 48. தொழில் அதிபரான இவரது மகனுக்கு, அதே மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன், திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களுக்கு, அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில், சூரத்தில் திருமணம் முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், ராஜேஷை கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக காணவில்லை. இது குறித்து அவரது உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். அப்போது தான், மணமகளின் தாய் ஸ்வாதியையும், ஒரு வாரமாக காணவில்லை என்ற தகவல் தெரியவந்தது. இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் கூறியதாவது: ராஜேஷ், ஸ்வாதி ஆகியோர், இளம் வயதில் அடுத்தடுத்  வீடுகளில் வசித்துள்ளனர். இருவரது குடும்பத்துக்கும் நல்ல பழக்கம் இருந்திருக்கிறது. அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்துள்ளனர். அவர்களது பிள்ளைகளுக்கு திருமணம் முடிக்க ஏற்பாடு நடந்துள்ள நிலையில் ராஜேஷ் – ஸ்வாதி இடையே, இளமைக் காதல் மீண்டும் மலர்ந்தது. இதையடுத்து, இருவரும் வீடுகளை விட்டு கிளம்பியிருக்கும் விபரம் பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

LEAVE A REPLY