ஒலிம்பிக்கில் ஆட்டம் காட்ட தொடங்கிய கொரோனா… – அவசர நிலை பிரகடனம்

144
Spread the love
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி  நடைபெற்று வருகின்றன. டோக்கியோ  நகரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அங்கு  அவசரகால நிலைமை அமல்படுத்தப்பட்டு உள்ளது.  டோக்கியோ நகரில் இன்று ஒரே நாளில் 2848 புதிய  கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஜப்பானிய தலைநகரில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான பதிவாகும்.  நகரில் உள்ள மொத்தம் உள்ள  12,635 கொரோனா  நோயாளிகளில் 20.8 சதவீதம்  பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒலிம்பிக் போட்டியாளர்கள் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இவர்கள் ஒலிம்பிக் கிராமத்தில் தங்கியுள்ளனர், இது நகரத்தின் பாதுகாப்பான இடங்களில் ஒன்றாக கருதப்பட்டாலும் தற்போது அங்கேயே பாதிப்பு பதிவாகி இருப்பது கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. 

LEAVE A REPLY