ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற தமிழ் பெண்…

72
Spread the love

சென்னையை சேர்ந்த நேத்ரா குமணன் சிறு வயதிலிருந்தே படகோட்டும் ஆர்வம் கொண்டவராக இருந்தார், நேத்ரா 2014, 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பாக கலந்துக்கொண்டார். 2014இல் தென்கொரியாவின் இன்சியான் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றபோது அவருக்கு வெறும் 16 வயதே ஆகியிருந்தது. ஓமனில் நடைப்பெற்ற ஆசிய படகுப் போட்டி தகுதி சுற்றின் ரேடியல் பிரிவில் வென்று, நேத்ரா குமணன்  21 தரவரிசை புள்ளிகள் பெற்றுள்ளார். இதனால் தரவரிசையில் முன்னிலை பெற்று, ஜூலை மாதம் துவங்கவிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகியுள்ளார். 23 வயதான நேத்ராதான் இந்தியா சார்பாக படகுப்போட்டியில் கலந்துகொள்ள இருக்கும் முதல் பெண் வீராங்கனை. இதற்கு முன் இந்தியா சார்பாக படகுப் போட்டிக்கு 9 ஆண் துடுப்பு வீரர்கள் மட்டுமே தேர்வாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY