ஒலிம்பிக் நடக்குமா…..? டோக்கியோவில் அதிகரிக்கும் கொரோனா….

51
Spread the love
கடந்த ஆண்டு நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா காரணமாக நடைபெறாமல் தற்போது வரும் 23ம் தேதி ஜப்பான் டோக்கியோவில் தொடங்க உள்ளது. இந்த போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு சென்று உள்ள ஒரு தடகள வீரர் மற்றும் ஐந்து ஒலிம்பிக் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு , பிரேசில் ஒலிம்பிக் போட்டி வீரர்கள் தங்கி இருந்த ஹமாமாஸ்து நகரில் ஒரு ஓட்டலில் 8 ஊழியர்கள், ரஷியாவின் ரக்பி செவன்ஸ் அணி ஊழியர் உள்ளிட்ட பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  ஜப்பானுக்குள் தற்போதே 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் நுழைந்துள்ளனர். டோக்கியோவில்  தற்போது அவசர நிலை பிறபிக்கப்பட்டு உள்ளது, அங்கு நோய்த்தொற்றுகள் அதிகரித்து வருகின்றன. ஒலிம்பிக் தொடங்க இன்னும் ஒருவாரம் உள்ள நிலையில் டோக்கியோவில் நேற்று மட்டும்  1,149 கொரோனா பாதிப்புகள்  பதிவாகியுள்ளன. இது நடப்பு ஆண்டின் மிக உயர்ந்த எண்ணிக்கையாகும். தற்போது உலகளவில் இருந்து விளையாட்டு வீரர்கள் டோக்கியோவை நோக்கி வரும் நிலையில் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஜப்பான் தீவிரம் காட்டி வருகிறது. 

LEAVE A REPLY