ஒலிம்பிக் வீராங்கனைக்கு ரயில்வேயில் பதவி உயர்வு…

68
Spread the love

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியில் மதுரையை சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி கலந்து கொண்டார். ஷூ கூட இல்லாமல் வெறும் காலில் பயிற்சி செய்து ஒலிம்பிக் கனவை அடைந்த ரேவதிக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர். ஜூனியர் – சீனியர் பிரிவில் மாநில, தேசிய போட்டிகளில் வெற்றிகளை குவித்த ரேவதி , டோக்கியோ ஒலிம்பிக்கில் 4x 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் பங்கேற்க தகுதி பெற்றார்.

இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட மதுரை வீராங்கனை ரேவதி வீரமணியை பாராட்டும் விதமாக அவருக்கு ரயில்வே துறையில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ரயில்வே துறையில் பணிபுரிந்து வரும் அவர் ஊழியர் நல ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார். தற்போது ரேவதிக்கு வழங்கப்பட்டுள்ள பணி அவர் விளையாட்டு பயிற்சிகளை மேற்கொள்ள உதவிகரமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவி உயர்வு பெற்ற ரேவதிக்கு மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் உள்ளிட்ட பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY