அதிமுகவில் ஆட்டத்தை ஆரம்பித்தார் ‘சுனில்’… பதறும் திமுக

846

திமுகவின் அரசியல் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் பணியினை ஐபேக் நிறுவனத்தின் பிரசாந்த் கிஷோர் மேற்கொண்டு வருவது அனைவருக்கும் தெரிந்ததே. இந்தநிலையில் அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பணியினை துவக்கியிருக்கிறார் OMG சுனில். கடந்த ஆண்டு இறுதியில் பிரசாந்த் கிஷோருடன் அக்ரிமெண்ட் போடுவதற்கு முன்னரே சுனிலை அழைத்து பேசினார் ஸ்டாலின். அப்போது பிராசாந்த் கிஷோர் வருவது குறித்தும் ஐபேக் நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும் ஸ்டாலின் கூறியிருக்கிறார். இதனை ஏற்றுக்கொள்ளாத சுனில் தான் விலகிக்கொள்வதாக கூறியதையடுத்து பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் திமுகவை கையில் எடுத்தது. அதன் பின்னர் கர்நாடக சென்ற சுனில், துணைமுதல்வரின் பொலிடிக்கல் அட்வைசர் ஆனார். இப்படியாக கிட்டத்தட்ட 5 மாதகாலம் சுனில் அங்கிருந்த நிலையில் அவரை எப்படியும் அதிமுகவிற்கு பணியாற்ற பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. முதலில் இதனை மறுத்து விட்டார் சுனில் என கூறப்படுகிறது.

காரணம் திமுகவுடன்  கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் நெருங்கி பயணித்து விட்டு அதிமுக பக்கம் செல்வது சரியாக இருக்காது என சுனில் தவிர்த்து இருக்கிறார். ஆனால் அமித்ஷா தரப்பு சுனிலை டில்லிக்கு வரவழைத்து 2 மணி நேரம் ஆலோசனை நடத்தியிருக்கிறது. இதனையடுத்து சுனில், எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்திருக்கிறார். தற்போது சென்னையில் தங்கியிருக்கும் சுனில் தினமும் இரவு நேரங்களில் எடப்பாடியை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். கட்சியில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து ஓபிஎஸ் உடனும்  ஆலோசனை நடத்துகிறார் என்கிற தகவல்களும் வெளியாக ஆரம்பித்துள்ளன. சுனில் கொடுத்த ஐடியாவின் படிதான் நேற்றைய தினம் ஊராட்சி செயலாளர்கள் பதவி ரத்து மற்றும் ஐடி 4 மண்டலமாக பிரிக்கப்பட்டது என்கிறது அதிமுக வட்டாரம். அடுத்த கட்டமாக 3 சட்டமன்ற தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்கிற ரீதியில் பிரிக்க வேண்டும் என்கிற சுனிலின் ஆலோசனையின் படி பணிகள் வேகமாக நடைபெற துவங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.. தங்களின் அனைத்து ரகசியங்களையும் தெரிந்த சுனில் அதிமுக பக்கம் சென்றிருப்பது திமுக மேலிடத்தில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றே அரசியல்பார்வையாளர்கள் கூறுகின்றனர்.. காரணம் ஆளுங்கட்சி மற்றும் பாஜகவின் பிண்ணனி என்பதே அவர்களின் கவலை.. 

LEAVE A REPLY