அதிமுக-அமமுக இணையுமா?.. சுனிலை சந்தித்த டிடிவியின் தூதர்…

609
Spread the love

திமுகவின் அரசியல் செயல்பாடுகளை கவனித்து வந்த சுனிலின் omg நிறுவனம் கடந்த ஒரு ஆண்டுகாலமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அரசியல் செயல்பாடுகளை கவனித்து வருகிறது. வெற்றி நடை தமிழகம் என்கிற விளம்பரம் முதல் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தில் என்ன பேச வேண்டும், எந்தப்பகுதியில் எந்த விஷயத்தை பேச வேண்டும் என்பது உள்ளிட்ட அனைத்தையும் சுனிலின் omg நிறுவனம் கவனித்து வருகிறது.. சசிகலா மற்றும் டிடிவி தினகரன் விவகாரங்களில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொஞ்சம் கூட இறங்கிப்போகாததற்கு காரணம் சுனில் தான் என்றும் அவரின் ஐடியா அடிப்படையிலேயே எடப்பாடி பழனிச்சாமி செயல்படுவதாகவே பலரும் விமர்சனம் செய்கின்றனர்..

இந்த நிலையில் சமீபத்தில் சுனிலை டிடிவியின் தூதர் ஒருவர் சந்தித்தாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சார பயணத்திட்டம் தொடர்பாகவும் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு குறித்த சர்வே மேற்பார்வையிட கடந்த வாரம் சுனில் டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அமமுக  நிர்வாகி ஒருவர் சுனிலை சந்தித்து பேசியிருக்கிறார்.. சுமார் 1 மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின் போது அதிமுக-அமமுக இணைப்பு குறித்து பேசியதாக தெரிகிறது. டிடிவியின் உத்தரவின் பேரிலேயே அமமுக நிர்வாகி சுனிலை சந்தித்துபேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கூறிய சில நிபந்தனைகள் குறித்து டிடிவியின் தூதரிடம் சுனில் கூறியிருப்பதாகவும் இது குறித்து 25ம் தேதிக்குள் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் தரப்பினர் முடிவெடுக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன… டிடிவியின் தூதர் சுனில் சந்திப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..  

LEAVE A REPLY