ஆன்லைன் கேம்.. 12 லட்சம் திருடிய சென்னை சிறுவன்…

111
Spread the love

சென்னை, அண்ணா நகரைச் சேர்ந்த தொழிலதிபர் நேற்று முன்தினம் நொளம்பூர் போலீஸ் ஸ்டேசனில் புகார் ஒன்றை அளித்தார். அதில், “எனது வீட்டில் 12 லட்சத்தை யாரோ திருடி விட்டனர்” என்று குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில்… தொழிலதிபரின் 8-ம் வகுப்பு படிக்கும், 14 வயது மகன், கொஞ்சம் கொஞ்சமாக வீட்டிலிருந்த 12 லட்சத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, சிறுவனிடம் போலீசார் விசாரித்தபோது, ஆன்லைன் கேம் விளையாட சிறுவன் பணத்தை திருடியது தெரியவந்தது. இதனைதொடர்ந்து சிறுவனை போலீசார் எச்சரித்து பெற்றோருடன் அனுப்பினர்.

LEAVE A REPLY