Spread the love

தமிழக சட்டசபைக்கு கடந்த 2016-ம் ஆண்டு தேர்தல் நடந்தபோது தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதியில் அதிமுக சார்பில் ஆர்.சுந்தர்ராஜ் போட்டியிட்டார். அவரை எதிர்த்து புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிட்டார்.இதில் ஆர்.சுந்தர்ராஜ் 493 வாக்குகள் வித்தியாசத்தில் டாக்டர் கிருஷ்ணசாமியை தோற்கடித்தார். இதை எதிர்த்து வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும்” என்று சென்னை ஐகோர்ட்டில் டாக்டர் கிருஷ்ணசாமி வழக்கு தொடர்ந்தார்.

. இந்த வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்தது. இந்த நிலையில் எம்.எல்.ஏ. சுந்தர்ராஜ் டி.டி.வி. அணியில் சேர்ந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.  இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
வழக்கை காரணம் காட்டி ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளை தவிர மற்ற 18 தொகுதிகளுக்கு மட்டும் ஏப். 18-ம்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 

இந்நிலையில்  நேற்று கிருஷ்ணசாமி தான் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்றார். இதையடுத்து வழக்கு தள்ளுபடியானது. வழக்கு வாபஸ் பெறப்பட்டதால் தேர்தல் நடத்த தடை விலகி விட்டது. எனவே இந்த தொகுதி தேர்தலை விரைவில் வேறு தேதியில் நடத்துவது பற்றி தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY