காதுக்கு பதிலாக தொண்டையில் ஆபரேஷன்..தனியார் மருத்துவமனை அலட்சியம்

92

சென்னை அம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஸ்நேகா (9) என்ற சிறுமியை காதில் ஏற்பட்ட பிரச்னைக்கு பெற்றோர் சிகிச்சைக்காக 2 நாள் முன் சேர்த்திருந்தனர். டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து இன்று காலை 10.30 மணியயளவில் சிறுமியை அறுவை சிகிச்சை அரங்குக்கு கொண்டு சென்றனர். 3 மணி நேர அறுவை சிகிச்சைக்குப்பின் மதியம் 1 மணியளவி்ல சிறுமியை கொண்டு வந்தனர். அப்போது பெற்றோர் தங்கள் மகளை பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர். அறுவை சிகிச்சை காதுக்கு பதிலாக தொண்டையில் செய்யப்பட்டிருந்தது.

இது குறித்து டாக்டர்களிடம் கேட்டதற்கு உரிய பதில் அளிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோரும், உறவினர்களும் மருத்துவமனையை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

LEAVE A REPLY