பெண் வயிற்றில் 6 கிலோ கட்டியை அகற்றி.. ஸ்ரீரங்கம் ஜிஎச் சாதனை..

289
Spread the love

திருச்சி முசிறி மணமேடு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் வயிற்று வலி காரணமாக பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் பலன் இல்லாமல் திருச்சி ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவரின் வயிற்றில் பெரிய அளவில் கட்டி இருப்பதை கண்டுபிடித்தோடு, உடனடியாக ஆபரேஷன் செய்ய அறிவுறுத்தினர்.மேலும் ஆபரேஷனை ஸ்ரீரங்கம் ஜி.எச்சில் செய்ய முடிவு செய்தனர்.   இன்று காலை ஆபரேஷன் நடைபெற்றது. பொது அறுவை சிகிச்சை நிபுணர் இளவரசன் தலைமையில் மயக்கமருந்து நிபுணர் ராஜசேகர், செவிலியர்கள் மணிமேகலை, சுஜாதா, உதவியாளர் மணி உள்ளிட்ட டீம் 2 மணி நேரத்திற்கும்

மேலாக ஆபரேஷன் செய்து அந்த பெண்ணின் வயிற்றில் உள்ள 6 கிலோ எடை கொண்ட கட்டி அகற்றப்பட்டது. இது போன்ற பெரிய அளவிலான ஆபரேஷன் ஸ்ரீரங்கம் ஜிஎச்சில் நடப்பது இதுவே முதல் முறையாகும். முயற்சி மேற்கொண்ட மருத்துவ டீமை பாராட்டுவோமே…..

LEAVE A REPLY