2-வது நாளாக திருச்சியில் பெண் ஊழியர்களின் ஒப்பாரி போராட்டம்…

48
Spread the love

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் 3-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே 2வது-நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் ஒப்பாரி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின்போது அங்கன்வாடி பெண் ஊழியர் ஒருவரை பிணம் போல் தரையில் படுக்கவைத்து ஊழியர்கள் சுற்றி அமர்ந்து ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர். இந்த காத்திருப்பு போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் தமிழ்செல்வி தலைமை தாங்கினார். மாவட்ட செயலர் சித்ரா பொருளாளர் ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் கோரிக்கைகளாக அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக ஆக்க வேண்டும், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கும் முறையான வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க

வேண்டும். அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு ஓய்வு பெறும்போது ஊழியர்களுக்கு 10 லட்சமும் உதவியாளர்களுக்கு 5 லட்சம் பணம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திருச்சி மாவட்டத்தில் உள்ள 1800 அங்கன்வாடி மையங்களில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY