Spread the love

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு குறித்த அனைத்துக் கட்சி கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமை வகித்தனர். மு.க.ஸ்டாலின், தமிழிசை சவுந்தரராஜன், கி.விரமணி, பாலகிருஷ்ணன், முத்தரசன், கமல்ஹாசன், சீமான், அபுபக்கர் உள்ளிட்ட 21 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். 

இதில் பேசிய மு.க.ஸ்டாலின், காமராஜர், அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா என யாருமே இட ஒதுக்கீட்டில் சமரசம் செய்ததில்லை. பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றார். 

மார்க்சிஸ்ட் கட்சி: தமிழகத்தில் அமலில் உள்ள 69% இடஒதுக்கீட்டுக்கு பாதிப்பில்லாமல், பொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீட்டை செயல்படுத்தலாம் என்றனர். 

தமிழக காங். கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி: 69% இடஒதுக்கீட்டிற்கு பாதிப்பு ஏற்படாமல் 10% இடஒதுக்கீடு வழங்குவதை தமிழக காங்கிரஸ் ஆதரிக்கிறது

சீமான்: 10% இடஒதுக்கீட்டை செயல்படுத்தக்கூடாது. 

இறுதியாக திமுக, விசிக, மதிமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், பாமக உள்ளிட்ட 16 கட்சிகள் 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பை பதிவு செய்தன. 

பாஜக, காங்கிரஸ், தமாகா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் புதிய தமிழகம் ஆகிய 5 கட்சிகள் மட்டுமே ஆதரவாக தங்களது கருத்துகளை பதிவு செய்தனர். 

கூட்டத்துக்கு பின் பேட்டியளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதா கொள்கையின்படி 10% இடஒதுக்கீடு விவகாரத்தில் சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்த பின் நல்ல முடிவெடுப்போம். ஜெயலலிதா கொண்டுவந்த 69% இடஒதுக்கீட்டிற்கு எந்த பாதகமும் வரக்கூடாது என்று கட்சிகள் கருத்து கூறியதாக தெரிவித்தார். 

LEAVE A REPLY