ஓபிஎஸ்சை நீக்க இபிஎஸ் சதி…. புகழேந்தி பகீர்…

171
Spread the love

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூர் புகழேந்தி நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியின் ஒரு பகுதி .. .

அதிமுக தலைமைக்கு உங்கள் மீது வேறு என்ன கோபம்?

ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக நான் ஒருவன்தான் குரல்கொடுக்கிறேன். இவனை எப்படியாவது காலி செய்துவிட்டால் அடுத்ததாக ஓபிஎஸ்ஸுக்கு எளிதில் செக்வைத்துவிடலாம் என நினைத்தார்கள். இன்றைக்குச் சொல்கிறேன் எழுதிவைத்துக்கொள்ளுங்கள்… தலைமைப் பதவியிலிருந்து ஓபிஎஸ்ஸை நீக்க முடிவெடுத்து காய்நகர்த்த ஆரம்பித்துவிட்டார்கள். அதற்கான முதல் பலியாக புகழேந்தி வெளியேற்றப்பட்டிருக்கிறான். அடுத்த செக் ஓபிஎஸ்ஸுக்குத்தான். இன்று நான்… நாளை ஓபிஎஸ்! அவ்வளவுதான். அதற்கு முன்னதாக என்னைப் போல் தளபதிகளாக இருக்கும் நான்கு பேரை ஓபிஎஸ்ஸிடமிருந்து பிரித்துவிட்டால் அவரை எளிதில் வெளியேற்றிவிடலாம் என நினைக்கிறார்கள். ஆனால், இதனை ஓபிஎஸ் எந்த அளவுக்குப் புரிந்து வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை.

உங்களை நீக்கிய பிறகு ஓபிஎஸ் உங்களிடம் ஏதாவது பேசினாரா?

நான் தப்புப் பண்ணிவிட்டேன் புகழேந்தி. உங்களை நீக்குவதற்கு எல்லோருமா சேர்ந்து எனக்கு நெருக்கடி கொடுத்துக் கையெழுத்துப் போட வைத்துவிட்டார்கள். கட்சி முழுக்க அவங்க கட்டுப்பாட்டுக்குள்ள போயிருச்சு. எல்லாரும் ஒண்ணுசேர்ந்துட்டாங்க என்னால ஒண்ணும் செய்ய முடியல. நீங்க கொஞ்சம் பொறுமையா இருங்க புகழேந்தி ’ என்று சொன்னார். அப்பத்தான் அவரும் சதிவலையில சிக்கிட்டார்னு தெரிஞ்சுது.. 

இவ்வாறு புகழேந்தி பதில் அளித்திருக்கிறார்.. 

LEAVE A REPLY