அவர் மட்டும் என்ன…ஓபிஎஸ் பாரீன் புரோகிராம் ரெடி

282

வெளிநாடு முதலீடுகளுக்காகவும், பல்வேறு திட்டங்களை பார்வையிடவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி லண்டன், அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விட்டு திரும்பியுள்ளார். முதல்வருடன் அமைச்சர்களும் சென்று வந்தனர். மேலும் எடப்பாடி சென்று வந்த சமயத்தில் சுமார் 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் பல்வேறு நாடுகளுக்கு சென்று வந்தனர். இந்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் விரைவில் வெளி நாடு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓபிஎஸ் நிதி அமைச்சராக மட்டும் இல்லாமல் வீட்டுவசதி துறையையும் கவனிக்கிறார். வீட்டுவசதித்துறையின் கீழ் தான் சென்னை பெரு நகர வளர்ச்சிக் குழுமமும் வருகிறது. எனவே அரசு குடியிருப்புகள் அமைப்பது மற்றும் நவீனப்படுத்துவது தொடர்பாக சீனா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு செல்ல பயணத்திட்டம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

 

LEAVE A REPLY