திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கோவிந்தாபுரம் காவாக்கரை பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுமார் 80 வருட காலமாக வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த மக்கள் குடியிருக்கும் பகுதி நீர்நிலை புறம்போக்கு எனக்கூறி அதனை காலி செய்ய வேண்டுமென நோட்டிஸ் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இந்த இடத்தை விட்டுச் சென்றால் தங்களுடைய வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும். எனவே இப்ஸபகுதியில் குடியிருக்கும் குடும்பத்தினருக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்..
வாணியம்பாடியில் நீர்நிலை புறம்போக்கை அகற்ற உத்தரவு… மாற்று இடம் கேட்டு…கோரிக்கை
- by Authour
