ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா….

175
Spread the love

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. அந்தவகையில் நான் ஒன்றுக்கு 3,500-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேநேரத்தில், தடுப்பூசி போடும் பணியையும் தீவிரப்படுத்தியுள்ளது. அந்தவகையில் நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பேட்டை செந்தமிழ் நகர் பகுதியில் வீடு வீடாக சென்று சுகாதார பணியாளர்கள் கொரோனா பரிசோதனை மேற்க்கண்டனர். அப்பொழுது அப்பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா உறுதியானது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து, அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY