கணவன்-மனைவி மறக்க வேண்டாம்..

72
Spread the love

ஒரு போதும் இந்த அடையாளத்தை மறக்க வேண்டாம். எந்த சூழல் வந்தாலும், குறிப்பாக குழந்தைகள் பிறந்த பின்னரும் நீங்கள் காதலர்கள் , கணவன் மனைவி என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். குழந்தை பிறந்து விட்டது. இனி நம்முடைய வாழ்க்கை முழுவதும் அந்த குழந்தைக்காத்தான் இனி குழந்தைக்கு நல்ல எதிர்காலம் அமைத்து கொடுப்பதே நம்முடைய முழு நேர யோசனையாக இருக்க வேண்டும் என்று நினைககதீர்கள். குழந்தை உங்களிடமிருந்து வருகிறது.அதனை வழிநடத்தும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது அதற்காக அந்த குழந்தையின் எதிர்காலத்தையும் சேர்த்து நீங்களே யோசிக்க வேண்டும் என்றில்லை. குழந்தை பிறந்தவுடன் காதலிக்க கூடாது. பொறுப்பாக இருக்க வேண்டும் என்றெல்லாம் நீங்களே கற்பனை செய்து கொண்டு வாழ்க்கையை கடுமையானதாக மாற்றிக் கொள்ளாதீர்கள்.

வெளிப்பாடு : நீங்கள் எப்படி உடை அணிகிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். உங்களின் வெளித்தோற்றம் தான் பிறரிடம் உங்களைப்பற்றிய நல்ல அபிப்ராயத்தை கொண்டு வந்து கொடுக்கும். நான் தாயாகிவிட்டேன் இனி என்னை அலங்கரித்துக் கொண்டு என்ன செய்யப்போகிறேன் என்று நினைத்து ஏனோதானோ என்று இருப்பது தவறான ஒன்று. எப்போதும் உங்களை உற்சாகமாக வைத்துக் கொள்ளுங்கள். உங்களைப் பற்றிய அபிப்ராயத்தை சொல்வது உடைகள் மட்டுமல்ல உங்களுடைய எண்ணங்களும் செயல்களும் கூட. அன்பான வார்த்தைகள் எப்போதும் உங்களிடம் இருக்க வேண்டும். உங்களை நீங்கள் எப்படி வெளிப்படுத்துகிறீர்கள் என்பது முக்கியம். வெளியில் எல்லாரிடமும் நன்றாக பேசிவிட்டு,பழகிவிட்டு வீட்டில் மனைவியிடமும் குழந்தைகளிடமும் வில்லன் ரோல் எடுப்பது என்பது உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்வதற்கு சமம். 

LEAVE A REPLY