106 நாட்களுக்கு பிறகு திகாரில் இருந்து வந்தார் சிதம்பரம்

203
Spread the love

 ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து, திகார் சிறையிலிருந்து ப.சிதம்பரம் வெளியே வந்தார். உச்சநீதிமன்ற நீதிபதிகள் பானுமதி, ஏ.எஸ்.போபன்னா, ஹிரிஷிகேஷ் ஆகியோர் கொண்ட அமர்வு, 106 நாட்களாக டெல்லி திகார் சிறையில் இருந்த ப.சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். இதனையடுத்து இரவு 8 மணியளவில் திகாரில் இருந்து வெளியே வந்தார் சிதம்பரம். அங்கு திரளாக இருந்த காங் தொண்டர்கள் அவரை வரவேற்றனர். சோர்வாக காணப்பட்ட அவர் வீட்டிற்கு சென்றார். 

LEAVE A REPLY