பாகிஸ்தானில் இயங்கும் அசோசியேட் பிரஸ் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளதாவது; பாகிஸ்தானிலிருந்து சீனாவுக்குக் கடத்தப்பட்டுள்ள 629 பாகிஸ்தான் பெண்களின் பெயர் பட்டியல் எங்களிடம் உள்ளது. இந்த பெண்கள் அனைவரும் சமீபத்தில் திருமணமானவர்கள். இவர்கள் எந்த விமான நிலையத்திலிருந்து சென்றனர், அவர்களின் தேசிய அடையாள எண், கணவர் பெயர் மற்றும் திருமண தேதி முதலிய விவரங்களும் கிடைத்துள்ளன. 
இவர்கள் எல்லோருக்கும் 2018 முதல் ஏப்ரல் 2019க்குள் திருமணம் நடந்திருக்கிறது. இவர்களை அவர்களின் பெற்றோர் திருமணம் என்ற பெயரில் விற்றிருக்க வேண்டும் என்ற  சந்தேகம் எழுந்துள்ளது.  இந்தப் பெண்களைக் கடத்தியவர்கள் 40 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை பெற்றுக் கொள்கின்றனர். பெண்ணின் பெற்றோருக்கு 2 லட்சம் மட்டும் கொடுக்கின்றனர்.

இந்த விசாரணையில் கிடைத்த விவரங்களை வெளியிட்டால் பாகிஸ்தான் சீனா உறவுகள் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தால் அரசு அதிகாரிகளுக்கு இது குறித்து பேச தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த பெண்களுக்கு சீனாவில் வேறொருவருக்கு மீண்டும் திருமணம் செய்து வைக்கப்படுகிறது. அந்த சீன கணவனால் வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலாளியாக்கப்படுகின்றனர். இதில் சிக்கி கொடுமைக்குள்ளாகும் பெண்கள் சிலர் அவ்வப்போது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு  மீட்குமாறு கெஞ்சுகின்றனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 52 சீனர்கள் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த 20 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 31 சீனர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இதில் தொடர்புடைய முஸ்லிம் மத குரு ஒருவர் தலைமறைவாகியிருக்கிறார்.

LEAVE A REPLY