மகளிர் சுயஉதவிக்குழு உருவாக்கியது திமுகதான்….. – பழனியாண்டி பிரச்சாரம்

37
Spread the love

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பழனியாண்டி இன்று தொகுதிக்குட்பட்ட அந்தநல்லூர் ஒன்றியம் சுற்று பகுதிகளான பெருகமணி, சிறுகமணி, காவல்கார பாளையம், திருவள்ளுவர் நகர், பெரியார் நகர், பெட்டவாய்த்தலை, காந்திநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திமுக வேட்பாளர் பழனியாண்டி பேசியதாவது…….. மக்களாட்சி தான் திமுகவின் ஆட்சி. மகளிருக்கான நல்லதொரு திட்டங்களை அமல்படுத்த முதன்முதலில் மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கியது திமுக ஆட்சி காலத்தில்தான். அதேபோல இந்தமுறையும் மகளிருக்கான அனைத்து திட்டங்களும் வந்து சேர திமுக தலைவர் ஸ்டாலின் உறுதியோடு இருக்கிறார். எனவே நான் கடந்த சட்டமன்ற தேர்தலில் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தேன். இருப்பினும் இந்த முறையும் தங்களை நாடி வந்துள்ளேன். என்னை எதிர்த்துப் போட்டியிடுபவர் 1991 முதல் 1996 வரை மந்திரியாக பணியாற்றியுள்ளார். அவர் பணபலம் படைத்தவர். நான் சாதாரண குடும்பத்தைச்

சார்ந்தவன். இருப்பினும் உங்கள் மீது நம்பிக்கை வைத்து தான் நான் இப்பொழுது போட்டியிடுகிறேன். முதியோர் உதவித்தொகை அதிகப்படுத்தி தருவேன். அதுமட்டுமல்லாமல் இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் கிடைத்திட வழிவகை செய்வேன். மேலும் தங்களின் அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து வைக்க பாடுபடுவேன் என உறுதிபடக் கூறுகிறேன் என பேசினார். இந்த பிரச்சாரத்தில் அந்தநல்லூர் ஒன்றியச் செயலாளர் கதிர்வேல்,  மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சிங்காரம், கைகுடி சாமி, சரவணன் விசுவநாதன், வாசன் குமார், தங்கவேல், அழகேசன், மதிமுக ஒன்றிய செயலாளர் சுரேஷ், பன்னீர் மற்றும் நிர்வாகிகள் லட்சுமணன், ராஜவேலு, விமல், விஜயபாரதி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்

LEAVE A REPLY