நண்பர்களுக்கு அனுமதி மறுத்த செக்யூரிட்டிகள் மீது குண்டு வீச்சு.. மாணவர் கைது

121
Spread the love

சென்னை பழைய பல்லாவரம், பி.வி. வைத்தியலிங்கம் சாலையில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அங்கு விஜயகுமார் (25) என்பவர் இங்கு தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கி, அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.  இவர் இரவு அருகில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு மீண்டும் தனது வீட்டிற்கு வந்தார். அப்போது அடுக்குமாடி குடியிருப்பின் செக்யூரிட்டிகளிடம், ‘‘என்னுடைய நண்பர்கள் வருவார்கள், அவர்கள் அனைவரையும் உள்ளே அனுமதிக்க வேண்டும்,’’ என்று கூறியுள்ளார். அதனை செக்யூரிட்டிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களிடம் விஜயகுமார்  தகராறில் ஈடுபட்டார். பின்னர் கோபத்துடன் மாடியில் உள்ள வீட்டிற்கு சென்ற விஜயகுமார், தனது அறையில் இருந்து மூன்று பிளாஸ்டிக் கவரில் பெட்ரோல் நிரப்பி அதனை கொளுத்தி செக்யூரிட்டிகளை தூக்கி போட்டுள்ளார். அது பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. அப்போது கீழே குழந்தைகளுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்த ஒரு பெண்ணும், குழந்தையும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பயங்கர சத்தம் கேட்டதால் குடியிருப்பில் இருக்கும் அனைவரும் அலறியடித்து கொண்டு வெளியே வந்து பார்த்தனர். குடியிருப்பு வாசிகள் வருவதைப்பார்த்த விஜயகுமார் மாடிக்கு ஒடி விட்டார். சம்பவம் குறித்து தகவல் கிடைத்து வந்த பல்லாவரம் போலீசார் வீட்டை சோதனை செய்தனர். அங்கு 15 குவாட்டர் பாட்டில்கள், பார்டிக்கு ஸ்னாக்ஸ் ஆகியவை இருந்தன. மேலும் விஜயகுமாரை தேடி போலீசார் மாடிக்கு சென்றனர் அங்கு அவர் இல்லை.. குடியிருப்பை சுற்றி பார்த்த போது விஜயகுமார் ஒரு இடத்தில் முணகலுடன் படுத்து இருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரித்த போது குடியிருப்பு வாசிகளுக்கு பயந்து 3வது மாடியில் இருந்து குதித்ததில் 2 கால்களும் உடைந்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

.

LEAVE A REPLY