குழந்தைகளுக்கு பிடித்த பன்னீர் ப்ரைடு இட்லி

93
குழந்தைகளை நன்றாக சாப்பிட வைப்பதற்குள் இல்லத்தரசிகளுக்கு போதும்,போதும் என்றாகிவிடுகிறது. ஆனால் வித்தியாசமாக சமையல் செய்து தரும்போது அவற்றை விரும்பி சாப்பிடுகின்றனர். அந்த வகையில் பன்னீர் ப்ரைடு இட்லி தயார் செய்யும் முறை குறித்து காண்போம். 
 
இட்லி -8, பெரிய வெங்காயம்-2, தக்காளி -2, பச்சை மிளகாய் -2, குடை மிளகாய், -1, பன்னீர் -100 கிராம் (சிறு துண்டுகளாக), எண்ணெய்,உப்பு, மிளகாய் தூள் -1/2 ஸ்பூன், சாம்பார் தூள்- 2 ஸ்பூன்.
 

முதலில் இட்லியை சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும். பின்பு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், குடை மிளகாய் எல்லாவற்றையும் பொடியாக நறுக்கி, கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், பச்சை மிளகாய், குடை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும். வதக்கிய பின்பு அதில் தக்காளியை போட்டு வதக்கிய பின் அதில் மிளகாய் தூள்,சாம்பார் தூள், பன்னீர், உப்பு போட்டு மீண்டும் வதக்கவும். பின்பு அதில் வெட்டி வைத்த இட்லி துண்டுகளை போட்டு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கிளறி விட்டு சிறிது நேரம் கழித்து இறக்கவும்.  இந்த சுவையான பன்னீர் ப்ரைடு இட்லியை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதை பார்க்கலாம்.

LEAVE A REPLY