கடவுளே..எது நல்லதோ அதை செய்.. பிராணாப் மகள் உருக்கம்

200
Spread the love

டில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், செயற்கை சுவாசக் கருவியின் உதவியோடு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:கடந்த ஆண்டு, ஆகஸ்ட் 8ம் தேதி எனது தந்தைக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

எனது வாழ்வில் மிக மகிழ்ச்சியான நாளாக அமைந்தது. மிகச் சரியாக ஒரு ஆண்டுக்குப் பிறகு, அதே ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி அவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளார். கடவுளே, எனது தந்தைக்கு எது சிறந்ததோ அதையே செய், அதேவேளை, இன்பத்தையும் துன்பத்தையும் ஒருபோல அனுபவிக்கும் சக்தியை எனக்கு வழங்கு, அனைவரின் அன்புக்கும் நான் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்

LEAVE A REPLY