உள்ளாட்சி தேர்தல்.. திருச்சி தெற்கு மற்றும் வடக்கு மா.செக்கள் அழைப்பு….

83
Spread the love

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் அவர்கள் இன்று வௌியிட்டுள்ள அறிக்கையில்….. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, மாநகராட்சி வார்டு மாமன்ற உறுப்பினர், நகர மன்ற வார்டு உறுப்பினர், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு அதிமுக சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட வாய்ப்பு கோரும் அதிமுகவினர்,  வருகின்ற 26.11.2021 முதல் 29.11.2021 வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சுப்பிரமணியபுரத்தில் உள்ள திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் உரிய கட்டண தொகையை செலுத்தி, விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம். விருப்பமனு பெறப்படும் தொடக்க நிகழ்ச்சி 26.11.2021 வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் அதிமுக மாவட்ட  அலுவலகத்தில் நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி அவர்கள் இன்று வௌியிட்டுள்ள அறிக்கையில்….. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, மாநகராட்சி வார்டு மாமன்ற உறுப்பினர், நகர மன்ற வார்டு உறுப்பினர், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு அதிமுக சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட வாய்ப்பு கோரும் அதிமுகவினர்,  வருகின்ற 26.11.2021 முதல் 29.11.2021 வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தில்லைநகரில் உள்ள திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் உரிய கட்டண தொகையை செலுத்தி, விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம். விருப்பமனு பெறப்படும் தொடக்க நிகழ்ச்சி 26.11.2021 வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் அதிமுக மாவட்ட  அலுவலகத்தில் நடைபெறும் என்று அவர் தொிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY