எதிர்கட்சி என்றாலும் மக்கள் பணியில் அயராது பாடுபடுவோம் – பரஞ்ஜோதி

384
Spread the love

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், மண்ணச்சநல்லுார் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பரஞ்ஜோதி இன்று வௌியிட்டுள்ள அறிக்கையில்……..மறைந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அவர்களின் அருளாசியுடன், தமிழக முன்னாள் முதல்வர்  அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் தமிழக துணை முதல்வர், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் நல்லாசியுடன் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திருச்சி புறநகர் அதிமுக வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மண்ணச்சநல்லுார், ஸ்ரீரங்கம், முசிறி, துறையூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்த வாக்காள பெருமக்களுக்கும், தேர்தல் பணியாற்றிய அதிமுக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும், எங்களுக்கு ஆதரவு அளித்த ஊடக நண்பர்களுக்கும் என அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தொிவித்துக்கொள்கிறேன். கழகம் எதிர்கட்சியாக இருந்தாலும் மக்கள் பணியில் அயராது பாடுபடும் என்று அவர் அந்த அறிக்கையில் தொிவித்து உள்ளார். 

LEAVE A REPLY